ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்தித்துப் பேசவுள்ளார். இதேவேளை நேற்றைய தினம் ஜனாதிபதியை, ரணில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதையடுத்தே இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று மாலை சர்வ கட்சித்தலைவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து அல்லது அதற்கு முன்னர் இருவரும் தனியாக சந்தித்து பேசக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளமை தொடர்பான நெருக்கடிகள் குறித்து இதில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேரடியாகச் சந்தித்துக்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.