பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் இடம்பெற்ற அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் சுமார் இரண்டரை மணி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இன்று இடம்பெற்ற அனைத்துக்கட்சிகள் கூட்டம் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது என எஸ்.பி திசாநாயக்கவும் விமல் வீரவன்சவும் தெரிவித்துள்ளனர்.
இன்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் றே;கண்டவாறு தெரிவித்துள்ளனர். சபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த சந்திப்பிற்கான ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.