இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். தனது அமைப்பு இலங்கைக்கான நிதிஉதவியை இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை தாம் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதிவிவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் சர்வதேச நாணயநிதியம் குறித்து தனக்கு தகவல் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
2016 ம் ஆண்டு சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தது.முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் சர்வதேச நாணயநிதியம் இந்த நிதியுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.