167
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்ஸியா (Alan García) உருகுவே தூதரகத்தில் அடைக்கலம் கோரி உள்ளார். பிரேசில் கட்டுமான பெரும் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கியதன் போது ஊழல் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள கார்ஸியா இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டதனை யடுத்து கார்ஸியா உருகுவே தூதரகத்தில் அடைக்கலம் கோரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love