ஐ.நா கேட்டுக் கொண்டதற்கிணங்க , தாங்கள் சவூதி அரேபியா தலைமையிலான படைக்கு எதிரான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்று வருகின்ற இந்தப் போரானது சர்வதேச அளவில் மிக மோசமான மனிதநேய நெருக்கடியாக கருதப்படுகின்றது.
இந்த போரின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் கோடிக்கணக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர்.
மேலும் நாட்டின் 50 சதவீத மருத்துவ சேவை வசதிகள் அழிக்கப்பட்டுவிட்டதுடன் பாடசாலைகள் அனைத்தும் கிளர்ச்சியாளர்கள் இருப்பிடமாகவும் அகதிகள் தங்குமிடமாகவும் மாறியுள்ளது. மேலும் ஏமனில் உள்ள அனைத்துக் குழந்தைகளுமே உதவியை எதிர்பார்த்து உள்ளனர் எனவும் அவர்கள் பஞ்சம், பட்டினி காரணமாக ஊட்டச்சத்தில்லாமல் இருப்பதாகவும் மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ள நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது