Home உலகம்கெயிட்டியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் பலி

கெயிட்டியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் பலி

by admin

கெயிட்டியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெயிட்டிய ஜனாதிபதி ஜொவினெல் மோஸ் அந்நாட்டில் இடம்பெற்ற ஊழல் விசாரணையை முறையாக நடத்தத் தவறியுள்ளார் எனவும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுதிருந்தன.

இந்நிலையில் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் ஜொவினெல் மோஸ்ஸின் ஊழல் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரணி சென்றனர். இதன் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலியானதாகவும், 5 பேர் காயம் அடைந்ததாகவும் பலர் கைது செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதலில் அமைதியாக இடம்பெற்ற பேரணியில் காவல்துறையினரை நோக்கி கற்கள் வீசப்பட்டதனைத் தொடர்ந்தே வன்முறை வெடித்தது என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More