Home உலகம்சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

by admin


அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மருத்துவமனையின் கார் தரிப்பிடப் பகுதியில் நேற்றையதினம் இந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப்ப பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் அங்கிருந்த ஒரு பெண் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாகவும் அதனைத் தொடர்ந்து காவல்துறையினா துப்பாக்கிதாரியை நோக்கி துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையின் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் துப்பாக்கி சூடு மேற்கோண்ட நபர் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டில் சுமார் 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More