நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு இதன் போது விளக்கம் அளிக்கப்பட்டதுடன், இந்நிலை தொடர்ந்தால் சட்டத்தை பேணுவது மிகவும் கடினமானதாக அமையும் எனவும் அதிகாரத்தை கைப்பற்ற சிலர் முற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.