இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம் என்பதனை முன்னிலைப்படுத்தியும், ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் திரண்ட மக்கள் தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் ஆரம்பான இப் போராட்டமானது தம்பர அமில தேரரின் உரையோடு ஆரம்பமானது. பௌத்த மத துறவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இச் சத்தியாகிரக போராட்டத்தை சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் போராட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிராக கையெழுத்து வேட்டையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.