துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேம் ஹிக்கை நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும் அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்களான ரிக்கி பொண்டிங், மார்க் வாஹ் ஆகியோரைக் கொண்டு வருமாறும் அவுஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் அறிவுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரரான கிரேம் ஹிக் இருந்து வரும் நிலையில் இடம்பெற்ற 24 போட்டிகளில் 18 போட்டிகளில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்துள்ளதனையடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் கடந்த 25-30 ஆண்டுகளாக மிகப்பெரிய வீரர்கள் இருந்துள்ளனர். கிரேம் ஹிக் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறார். அத்துடன் துடுப்பாட்டவீரர்கள் செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கின்றனர்.
எனவே கிரேம் ஹிக்கை மாற்ற வேண்டிய நேரம் இதுவே என அவர் தெரிவித்துள்ளார்