பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஷியா முஸ்லிம்களின் ‘இமாம்பர்கா’ என்ற வழிபாட்டுத் தலம் அருகே நேற்று வாராந்த வெள்ளிக்கிழமை சந்தை கூடியவேளை இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிககப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையின ஷியா முஸ்லிம்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது