ஆபிரிக்க ஒன்றியம் அமைப்பில் பணிபுரியும் பெண்களுக்கு பெருமளவில் பாலியல் தொந்தரவுகள் காணப்படுவதாக அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் போன்று செயல்படும் இந்த அமைப்பில் பணிபுரிவோரில் பெரும்பாலானோர் தற்காலிகமாக பணிபுரியும் இளம்வயதினர் ஆவர்.
இந்தநிலையில் நிரந்தர வேலையை எதிர்நோக்கி இங்கு பணிகளில் இணையும் இளம் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் தொந்தரவுகள் தொடர்பான 44 முறைப்பாடுகள் மீதான விசாரணையில் இந்த விடயம் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையை உறுதிசெய்வதற்கு பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கு இளம்பெண்கள் வற்புறுத்தப்படுவதாக இந்த விசாரகைளின் மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது