கிரிமியா பிராந்தியத்தில் தரித்து நின்ற யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஸ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர். ஆயுதம் தாங்கிய இரு படகுகளும் ஒரு சிறு படகும் இந்த தாக்தலை மேற்கொண்டு யுக்ரேனின் கடற்படை கப்பல்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட கப்பல்களில் இருந்த அதிகளவான யுக்ரேன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்குமிடையழலான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்தியுள்ளன.தனது கடல் எல்லைக்குள் யுக்ரேன் கப்பல்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக ரஸ்யா குற்றம் சுமத்தியதியதிலிருந்து இரு நாடுகளுக்குமிடையில் பிரச்சினை ஆரமப்பமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இருநாடுகளும் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்திக்கு கீழே உள்ள ஒரு பாலத்தில் ரஸ்யா தனது டாங்கர் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் ரஸ்யாவின் இந்த நடவடிக்கையானது தேவையற்றதும் பைத்தியகாரத்தனமானது எனவும் உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ யுக்ரேனின் தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பிரச்சினை தொடர்பாக இன்று ஜிஎம்டி நேரம் 4 மணிக்கு ஐ.நா.பாதுகாப்பு பேரவையின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டுமென ரஸ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.