Home இந்தியாபயங்கரவாதியை, பயன்படுத்திய இளைஞர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கைது…

பயங்கரவாதியை, பயன்படுத்திய இளைஞர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கைது…

by admin

தனது புகைப்படத்துக்கு பயங்கரவாதி என்ற வார்த்தையை பயன்படுத்திய இளைஞர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். யோக்வேதாந்த் போடார் என்ற அந்த இளைஞர் தனது முகத்தை கைக்குட்டையால் பாதியளவு மூடி, விமானத்தில் பயங்கரவாதி, நான் பெண்களின் இதயத்தை அழிப்பவன் எனப் பதிவிட்டிருந்தார்.

கொல்கத்தாவிலிருந்து மும்பை சென்றுகொண்டிருந்த ஜெட் ஏயார்வேஸ் விமானத்தில் இடம்பெற்ற இதை பார்த்த சக பயணி விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதனையடுத்து இளைஞரை பாதுகாப்பு படைகள் கைது செய்வதற்காக விமானம் நிறுத்தி வைக்கும் இடத்திற்கு திருப்பி விடப்பட்டது.

தனது 20களில் இருக்கும் அந்த இளைஞர் தொல்லை கொடுக்கும் விதமாக நடந்து கொண்டதாலும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விதமான வார்த்தைகளை பேசியதாகவும் விமான அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதை அந்த இளைஞர் விளையாட்டாக செய்ததாக அவரின் தந்தை உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட பயணிகளை கொண்ட அந்த விமானம் இதனால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக செலுத்தப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More