சபாநாயகர் கருஜெயசூர்யவின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் சிலர் நேற்றையதினம் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அவர் தற்போது தனது சுய புத்தியுடனா செயற்படுகின்றார் என்ற சந்தேகம் எழுவதாகவும் அவரை வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை சீர்குலைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா , சபாநாயகர் ஹன்சாட் அறிக்கையை மாற்றியுள்ளதாகவும் அவரின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு பங்குதாரராக இருக்க தம்மால் முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்ற அமர்வு சட்ட விரோதமானது என தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க முன்னர் இருந்த சபாநாயகர்களை முன்மாதிரியாகக் கொண்டு தற்போதைய சபாநாயகர் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, வெளிநாட்டுச் சக்திகளின் தேவைக்காக சபாநாயகர் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தற்போது தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். நாட்டிற்கு தற்போது அவசியமானது பொதுத் தேர்தலே எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.