இந்த ஆண்டுக்கான அதிசிறந்த றக்பி வீரருக்கான விருதினை அயர்லாந்தின் ஜொன்னி செக்ஸ்டன் கைப்பற்றியுள்ளார். 2001ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிசிறந்த றக்பி வீரர் விருதை வென்ற முதல் அயர்லாந்து வீரராக ஜொன்னி செக்ஸ்டன் திகழ்கின்றார்.
சர்வதேச றக்பி சம்மேளனத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா மொனோக்கோவில் நடைபெற்ற போதே இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.
அதிசிறந்த றக்பி வீரருக்கான விருதுக்கு தென்னாபிரிக்காவின் மெல்கம் மாக்ஸ் மற்றும் பெப் டி க்ளக் அயர்லாந்தின் கெய்த் வூட் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.
அதிசிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதை அயர்லாந்து தேசிய றக்பி அணியின் ஜோ ஷமீட் கைப்பற்றியுள்ளார். அத்துடன் அதிசிறந்த வீராங்கனைக்கான விருதினை நியூஸிலாந்து மகளிர் அணியின் ஜெசி ட்ரெமியூலியா பெற்றுள்ளதுடன் ஆண்டின் அதிசிறந்த றக்பி அணிக்கான விருதினை அயர்லாந்து றக்பி அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது