இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் சப்பாரா புகையிரத நிலையத்தில் நேற்றையதினம் 16 மனித மண்டை ஓடுகள், 34 எலும்புகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சப்பாரா புகையிரத நிலையத்தில் வழக்கம் போல் காவல்துறையினர் நேற்று ரோந்து சென்று கொண்டிருந்த போது ஒரு சாக்கு மூட்டையில் இருந்து இவற்றினைக் ரைகப்பற்றியுள்ளனர். குறித்த சாக்கு மூட்டையில் 16மண்டை ஓடுகள் மற்றும் 34 மனித எலும்புகளுடன் பூடான் நாட்டு நாணயத்தாள்களும் பல்வேறு நாடுகளின் ஏரிஎம் அடடைகள் சிம்கார்ட்டுக்களும் காணப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரையும் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், உத்தரப்பிரதேசம் பாலியா நகரில் இருந்து இந்த மனித மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் கொண்டு வருவதாகவும், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி வழியாக பூட்டானுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மாந்திரீக செயல்கள் செய்பவர்களுக்கு மனித எலும்புகளை விநியோகம் செய்யும் பணியை குறித்த இளைஞர் செய்வதாக சந்தேகப்படுவதாகவும் விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் முக்கிலைப்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த எலும்புகள் யாருடையது, எங்கிருந்து கொண்டுவந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படடுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.