Home இலங்கை வடமாகாண முன்னாள் முதல்வரின் பாதுகாப்பு நீக்கம்

வடமாகாண முன்னாள் முதல்வரின் பாதுகாப்பு நீக்கம்

by admin

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்ததனையடுத்தே இவ்வாறு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரின் பதவிக் காலம் நிறைவடைந்தமை காரணமாகவே பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சினூடாக உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்தமை காரணமாகவே இவ்வாறு பாதுகாப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More