பிஹாரில் உள்ள சிறுவர் இல்லங்கள் குறித்தும்; சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பிஹார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் பலர் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த முறைப்பாட்டினையடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் பிஹாரில் உள்ள 110 சிறுவர் இல்லங்கள் குறித்தும் டாடா இன்ஸ்டிடியூட் ஒப் சோஷியல் சயின்ஸ் என்னும் நிறுவனமும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிஹார் சிறுவர் இல்லங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து மாநில காவல்துறையினர் எடுத்த நடவடிக் கைகள் போதிய அளவுக்கு இல்லை எனத் தெரிகின்றது எனத் தெரிவித்துள்ளர்.
எனவே, சித்திரவதை, பலாத்காரம், முறை கேடு முறைப்பாடுகளில் சிக்கியுள்ள எல்லா சிறுவர் இல்லங்கள் குறித்தும், அவற்றின் உரிமையாளர்களிடமும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
பிஹாரில் மொத்தம் 110 சிறுவர் இல்லங்கள் உள்ள நிலையில் அவற்றில் 17 இல்லங்கள் பல்வேறு முறைப்பாடுகளில் சிக்கியுள்ளன. இதில் முசாபர்பூர் இல்லம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மேலும் 16 இல்லங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது