உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நோர்வே வீரர் மக்னஸ் கார்ல்சென் ( Magnus Carlsen) சம்பியன் பட்டத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளார். உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சம்பியனை எதிர்த்து, 8 வீரர்களுக்டையிலான கன்டிடேட் போட்டியில் வெற்றி பெறுபவர் போட்டியிடுவது வழமை.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் கடந்த 3 வார காலமாக நடைபெற்று வந்தநிலையில் நடப்பு சம்பியனும், முதல்தர வீரருமான நோர்வேயின் கார்ல்சென்னுடன் கன்டிடேட் போட்டியில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் பாபியானோ காருனா போட்டியிட்டார்.
12 சுற்றுகள் அடங்கிய இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றும் சமநிலையில் நிறைவடைந்தது.132 ஆண்டு கால உலக செஸ் போட்டி வரலாற்றில், 12 சுற்று போட்டிகளில் ஒன்றில் கூட முடிவு கிடைக்காத போட்டி இதுவாகும். இதனையடுத்து இடம்பெற்ற சம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் கார்ல்சென் வென்று உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளர்h.
27 வயதான கார்ல்சென் 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4-வது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது