Home இலங்கை கடற்படையினர் குறித்த மஹிந்தவின் குற்றச்சாட்டு பொய்யானது – ருவான் விஜேவர்தன

கடற்படையினர் குறித்த மஹிந்தவின் குற்றச்சாட்டு பொய்யானது – ருவான் விஜேவர்தன

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கடற்படையினர் குறித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குற்றச்சாட்டு பொய்யானது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கடற்படையினரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் வேண்டுமென்றே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் போராட்டம் நடத்திய போது அங்கு கடற்படையினரை அனுப்பியதாக மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஸவின் குற்றச்சாட்டை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்டிருந்த இரண்டு கப்பல்களையும் மீட்கவும், துறைமுகத்தை பாதுகாக்கவுமே கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ள அவர் கடற்கொள்ளையர்களுக்கு உசிதமான சோமாலியா போன்று இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அடையாளப்படுத்த மஹிந்த விரும்புகின்றாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More