யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவை சேர்ந்த இளைஞர்கள் 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் என யாழ் மாவட்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த குழுவை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை யாழ் மாவட்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் இவர்களிடமிருந்து, ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களையே அவர்களது வீட்டில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களின் வீடுகளிலிருந்து வாள்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் சுன்னாகம் காவல்துறை பிரிவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டமையால், சுன்னாகம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூவரையும் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்