Home இந்தியாரஸ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்

ரஸ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்

by admin


ரஸ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசின் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்யும் பேரவை நேற்றையதினம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஒக்டோபரில் நடத்தப்பட்ட மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் பி1135 ரக கப்பல்களும் வாங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது.

அத்துடன், பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய பேரவை வழங்கிய ஒப்புதலின் அடிப்படையில் ரஸ்யாவில் கட்டப்பட்டுவரும் இரண்டு கப்பற்படைக்கான கப்பல்களும், பிரம்மோஸ் ரக ஏவுகணைகளும் வாங்க முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில் ரஸ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுத தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More