இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் வங்கி வாராக் கடன் பிரச்சினையால் மூன்று தனியார் நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்யவுள்ளது. ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று நீண்டகாலமாக திருப்பிச் செலுத்தாமல் உள்ள சோனா அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட், எம்சிஎல் குளோபல் ஸ்டீல், ஜெயஸ்வால் நெகோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் சொத்துகளையே இவ்வாறு ஏலம் விடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏலம்விட்டு அந்நிறுவனங்கள் பெற்ற கடன்களைத் திரட்ட அவ்வங்கி முடிவு செய்துள்ளது. வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்த ஏலம் நடத்தப்படவுள்ளதாகவும் டிசம்பர் 13ஆம் திகதி இந்த ஏலத்தை மின்னணு முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்டேட் வங்கி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.மேற்கண்ட மூன்று நிறுவனஙகளின் சொத்துகளை ஏலத்தில் விடுவதன் மூலம் 2 ஆயிரத்து110.71 கோடி ரூபா பணத்தை மீட்க ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.