அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதல் ஒன்றின் போது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான்கள் அமைப்பின் சிரேஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று வழிநடத்தி வந்தவரும், ஹெல்மண்ட் மாகாணத்தின் தலிபான் மாற்று நிர்வாகத்தின் தலைவராகவும் இருந்தவருமான முல்லா அப்துல் மனன் என்பவரே சனிக்கிழமை இரவு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது செல்வாக்கு, அனுபவம், ஈர்ப்பு மிக்கவராக இருந்த அவரது மறைவு தலிபான்களுக்கு இழப்பாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக, அரச படைகளின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ள நிலையில் தீவிரவாதிகளின் இலக்குகள் மீதான வான் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது