குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாற்றுவலுவுடையோருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் ஜெப்பூர் நிறுவனம் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.யாழ்.ஜெப்பூர் செயற்கை அவயங்கள் பொருத்தும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 6ஆம் , 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் யாழ்.சுண்டுக்குளி மகளீர் கல்லூரிக்கு அருகில் காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளது.
பயன்பாடற்ற பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நோக்குடன் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
கண்காட்சியில் காட்சிப்படுத்த படும் பொருட்களை பயனாளிகள் பார்வையிட்டு தாம் விரும்பும் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான இலவச பயிற்சிகளை ஜெப்பூர் நிறுவனம் வழங்கவுள்ளதுடன் , பயிற்சி காலத்தின் போது உற்பத்திக்கு தேவையான பொருட்களை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்க உள்ளனர்.
அத்துடன் பயிற்சியின் பின்னர் அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூல பொருட்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க உள்ளதுடன் , உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்திகொடுக்க உள்ளனர்.
எனவே கண்காட்சி நடைபெறும் நாட்களில் கண்காட்சியினை பார்வையிட்டு , தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜெப்பூர் நிறுவனத்தினர் கோரியுள்ளனர்.