பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று முதல் தொடர்ச்சியாக எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னர் இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.