Home உலகம்ஆப்கான் தீவிரவாதம் குறித்து இம்ரான் கவனம் செலுத்த வேண்டும்…

ஆப்கான் தீவிரவாதம் குறித்து இம்ரான் கவனம் செலுத்த வேண்டும்…

by admin

ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் தீவிரவாதிகள் மேற்கொண்டுவரும் கொடூர தாக்குதலில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால், இம்ரான்கான் பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு டிரம்ப் ஒரு கடிதம் எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு இம்ரான்கான்  ஆதரவு வழங்க வேண்டும் எனவும் சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும் எனவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அல்கைய்தா அமைப்பின் தலைவர் பின்லேடனுக்கு அபோதாபாத் நகரில் அடைக்கலம் கொடுத்ததை பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு செய்த துரோகம் என கடந்த வாரம் டிரம்ப் விமர்சித்து இருந்த நிலையில் இந்த கடிதத்தை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More