178
இஸ்ரேல் அமைந்துள்ள பகுதியில் இருந்த பழமையான துறைமுகம் அருகே 900 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கிணறு ஒன்றின் அருகே கற்களுக்கு நடுவே இருந்த வெண்கல பானையில் ஒரு காதணியுடன் இந்த தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் யாரோ ஒருவரால் இவை புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1101ஆம் ஆண்டு இந்த பகுதியில் நடந்த போரில் சிலுவை படையால் இதனை புதைத்து வைத்தவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love