தங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்தினால், வேறு எந்த மத்திய கிழக்கு நாடுகளும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அமெரிக்காவால் தடுத்து நிறுத்த முடியாது எனவும் ஒருவேளை மத்தியகிழக்கு நாடுகளின் நாடுகளின் கடல் பாதையில் ஈரானின் கப்பலைத் தடுக்க முயன்றால், அந்தப் பாதையே அடைக்கப்படும் எனவும் இது குறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு தாங்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது நன்கு தெரியும். தொடர்ந்து தாங்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வோம். அவர்களால் அதனைத் தடுக்க முடியாது. எனினும் ஒரு நாள் தங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அவர்கள் தடுக்க எண்ணினால் வேறு யாரும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாது எனவும் அவர் தெமரிவித்துள்ளார்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய போதும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த ஏனைய நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா ஈரான் மீது பொருளாதரத் தடைகளை விதித்து வருவதுடன் உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.