Home பிரதான செய்திகள்ஐ.பி.எல். ஏலப்பட்டியல் – 70 இடத்திற்காக 1,003 வீரர்கள் பதிவு

ஐ.பி.எல். ஏலப்பட்டியல் – 70 இடத்திற்காக 1,003 வீரர்கள் பதிவு

by admin

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 18ம் திகதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள நிலையில் 70 இடத்திற்காக மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அணி நிர்வாகங்கள் சார்பில் பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டு விட்டதால் இந்த முறை 70 வீரர்கள் மட்டுமே ஏலத்தின் மூலம் எடுக்கப்படவுள்ளனர்.

இந்த 70 இடத்திற்காக 1,003 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர் எனவும் அதில் 232 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 800 பேர் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாதவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறை இங்கிலாந்தில் ஏலம் நடத்துவதில் பிரபலமான கூக் எட்மிடெஸ் என்பவர் ஐ.பி.எல். ஏலத்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More