Home இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் வாதத்தை முறியடித்த RTI ஆணைக்குழுவின் தீர்ப்பு….

ஜனாதிபதி செயலகத்தின் வாதத்தை முறியடித்த RTI ஆணைக்குழுவின் தீர்ப்பு….

by admin


2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக வழங்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு தகவலுக்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த தீர்ப்பானது, 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தன்று ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட தகவலுக்கான விண்ணப்பம் தொடர்பானதாகும்.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்படும் இந்த சொத்துக்கள் தொடர்பான வெளிப்படுத்தலை பெற்றுக் கொண்டவுடன் பகிரங்கமாக எவரும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

இந்த பிரகடனம் தனிநபர் தொடர்பான தகவலை மூன்றாந் தரப்புக்கு வழங்க முடியாது எனும் ஜனாதிபதி செயலகத்தின் வாதத்தை முறியடித்ததுடன் குறிப்பிட்ட தகவல் வெளியிடப்படல் வேண்டும் என தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் (RTI)  தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, குறித்த மேன்முறையீடானது ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிப்படை தன்மை பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்களின் விபரங்களைப் அணுகுவதற்கான பொதுமக்களின் உரிமை போன்றவற்றை பாதிப்பதாக அமையும் என்பதை TISL சுட்டிக்காட்ட விரும்பகிறது.

தீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது, (ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா) TISL  நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர ‘சொத்துக்களை வெளிப்படுத்தல் தொடர்பாக தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு (RTI) பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்குக் கிடைத்த பாரிய வெற்றி எனவும் ஜனாதிபதி செயலகம், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் (RTI)  அறிவுறுத்தலுக்கமைய வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்கள் விபரங்களை உடனடியாக பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும்’ எனவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More