ஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது. தென் ஆபிரிக்காவின் டேர்பன் நகரில் நடைபெற்ற இந்த ஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் கனடா, தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பொட்ஸ்வானா மற்றும் இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.இலங்கையிலிருந்து 18 வீரர்களும் 3 வீராங்கனைகளும் போட்டியிட்ட நிலையில் இலங்கையின் அரோஷ் சமரவிக்ரம மற்றும் ரமித் வீரசிங்க ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.