கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியா விடுவிக்கபடுவதாகவும் இதன் ஒரு கட்டமாக இந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது
இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் பலவற்றை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு- கிழக்கு அபிவிருத்தி செயலணியில் உறுதியளித்திருந்தார். இந்த விடயம் குறித்து அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டப்பட்டிருந்ததாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இராணுவத்தினர் வசமுள்ள 10 ஏக்கர் காணி நாளைய தினம் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் தம் வசமிருந்த 70 ஆயிரம் ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனியாருக்குச் சொந்தமான இன்னும், ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் காணிகளே இராணுவத்தினர் வசமுள்ளதாகவும் அந்த காணிகளும் படிப்படியாக அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.