இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநரான பா.இரஞ்சித், தொடர்ந்து ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தயாரித்த ரஞ்சித் தற்போது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படத்தை தயாரிக்கின்றார்.
பெரும்பாலானவர்கள் கொண்டாடிய இந்தப் படம், சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது. வருகிற 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படம் திரையிடப்படவுள்ளது.
இந்நிலையிலேயே, தன்னுடைய தயாரிப்பில் இரண்டாவதாக உருவாகும் படத்தின் முதல் சுவரொட்டியை (ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை) வெளியிட்டுள்ளார் இயக்குனர் பா.இரஞ்சித். ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடிக்க, அதியன் ஆதிரை இயக்குகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, டென்மா இசையமைக்கின்றார்.