தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்கள் தொடர்பில் தான் 4 வருடங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அஸ்கிரி மற்றும் மல்வத்து தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தான் கருத்து ஒன்றை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அன்றி, இன்னொருவரை பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டாம் எனக் கூறியிருந்ததாகவும், இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு பலனும் ஏற்படாது என வலியுறுத்தியதாகவும் தெரிவித்த அவர், இதனால் தன்னை கட்சியிலுள்ள சிலர் துரோகியாக அடையாளப்படுத்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து சூழ்ச்சி செய்வதாகக் குற்றம் சுமத்தி, தான் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலைமைக்கும் தள்ளினார்கள்.
அப்போது தான் கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று என்ன நடந்துள்ளது? நான்கு வருடங்களுக்குப் பின்னர்தான் கூறியது அவ்வாறே இடம்பெற்றுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.