குளோபல் தமிழ் செய்தியாளர்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். கடந்த 4ஆம் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடிலேயே ஜனாதிபதி இவ்வாறு கால அவகாசத்தைக் கோரியிருந்தார்.
ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்து, நாளை 11ஆம் திகதியுடன் ஏழு நாட்கள் நிறைவடைகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி வெற்றிடமாக காணப்படுவதுடன் நாட்டில் அமைச்சரவை ஒன்றும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் இவ்வாறனதொரு நெருக்கடி நிலை ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இலங்கையில் தொடரும் அரசியல் நிலவரம் தொடர்பில் உண்ணிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாடுகள் பலவும் கூறியுள்ளன.
இதுவேளை நாட்டில் இயல்புநிலையை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, ஏழு நாட்களுக்குள் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாளையும் அவர் குறிப்பிட்ட ஏழு நாட்களும் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.