Home இந்தியாஇந்தியாவின் ரிசேவ் வங்கி ஆளுநர் பதவிவிலகல்

இந்தியாவின் ரிசேவ் வங்கி ஆளுநர் பதவிவிலகல்

by admin



இந்தியாவின் ரிசேவ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல்  பதவிவிலகியுள்ளார். இந்திய மத்திய அரசுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னர், ரிசேவ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்தபோதும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை இந்திய மத்திய அரசு நியமித்தமையும் முரண்பாடுகளை விரிவாக்கியது.

அக் குழுவின் தலையீடு அதிகமாக காரணமாக, இருதரப்புக்கும் இடையே மறைமுகமாக இருந்து வந்த முரண்பாடு அண்மையில் வெளிப்படையானது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  விரால் ஆச்சார்யா மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

ரிசேவ் வங்கி கவர்னர் உர்ஜித்படேலுக்கும், இந்திய நிதி அமைச்சகத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாகவும், கடந்த மாதம் 19ஆம்  திகதி நடந்த வாரியக் கூட்டத்தில் அவர் பதவிவிலகலை  அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன. பின்னர் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து வாரியக்கூட்டம் இணக்கமாக நடைபெற்றது

இந்தநிலையிலேயே உர்ஜித் படேல் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து உர்ஜித் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘வங்கியின் ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறேன். இது உடனடியாக அமலுக்கு வருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். இவர் ரிசேவ் வங்கியின் 24வது ஆளுநராக  2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More