தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிவடைந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. 119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7ம்திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வெளியாகத் தொடங்கி உள்ளன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளியான தகவலின்படி காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்ததாகவும் மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 4 இடத்திலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. இந்த முன்னிலை நிலவரத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் ஆட்சி மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது