கடந்த ஓரு வருடத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையகம் பரிந்துரைத்த 67 வழக்குகளில் 66 வழக்குகள் காவல்துறையினர் மீதானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் மனித உரிமை மீறல் தொடர்பாக மாதம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் கடந்த நவம்பர் மாதம் வரை 67 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையகம் பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது