Home இலங்கைதாயாரின் நகைகளை திருடிய பெண் கைது

தாயாரின் நகைகளை திருடிய பெண் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்ணை வட்டுகோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வட்டுகோட்டை கிழக்கில் வசிக்கும் நபர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது மனைவியின் நகைகள் வீட்டில் இருந்து களவாடப்பட்டு உள்ளது. பகல் வேளை வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அதனை திருடி சென்று இருக்கலாம் என வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர்; தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று புதன் கிழமை முறைப்பாட்டாளரான வீட்டின் உரிமையாளருக்கு தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்ட இளைஞன் ஒருவர் உங்கள் நகைகள் அனைத்தும் வீட்டு வளவினுள் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

குறித்த இளைஞன் கூறிய இடத்திற்கு சென்று பார்த்த போது திருடப்பட்ட நகைகள் அனைத்தும் அவ்விடத்தில் காணப்பட்டதனையடுத்து அவை தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு முறைப்பாட்டாளர் அறிவித்தார்.

அதனையடுத்து குறித்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் தொலைபேசி இலக்கத்திற்கு உரிய இளைஞரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அஹன் போது குறித்த இளைஞன் முறைப்பாட்டாளரின் மகள் தனது காதலி எனவும் , அவரே தனது தாயாரின் நகைகளை திருடி தன்னிடம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More