ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை 4 வழங்கப்படவுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, ஏற்கெனவே இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.