குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்தில் அதிகரித்துவரும் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது சம்பந்தமான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்; பணிமனையில் நடைபெற்றது.
நேற்று காலை நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் வடமாகாண விவசாய அமைச்சின் செயலர் தெய்வேந்திரன் விவசாயப் பணிப்பாளர் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட அரச திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.
பாதீனியத்தினை கடுப்படுத்துவதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளபோதும் அதனை அமுல்படுத்துவதில் அசமந்தப்போக்கு காணப்படுவதாக தெரிவித்த ஆளுநர் பாரபட்சம் இன்றி பாதீனியம் காணப்படும் தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அதேபோன்று அரச காணிகளில் காணப்படும் பாதீனியத்தினை அழிப்பதற்கான பொறிமுறையினை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளை பணித்தார்.