எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததை அடுத்து மகிந்த ராஜபக்ஸ அணியினர் தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியு ம் அந்தஸ்தும் வேண்டும் என முரண்பட்டு வருவதுடன் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இது குறித்து முறையிடவும் உள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள எம்.எ.சுமந்திரன், ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும் இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பனை அனைவரும் ஏற்றுக்கொள்வதே விதியாக அமையும் என சுட்டிக் காட்டியுள்ளார்.