புதுவை மாநிலம் ஏனாமில் ‘பெய்ட்டி’ புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் புயல் கரையை கடந்தபோது, 80 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்றுடன் கனமழையும் பெய்தது.
இதனால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததுடன் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதனால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பாடசாலைகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள் நிலையில் அவர்களுக்கு கல்வித்துறையின் மதிய உணவுக்கூடம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதனால்; உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது