134
ஒழுக்காற்று விசாரணையை மேற்கொண்டு லக்ஷ்மன் செனவிரத்னவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளதாக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். லக்ஷ்மன் செனவிரத்னவிற்கு எந்தவொரு அமைச்சு பதவியையும் வழங்க வேண்டாம் எனவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love