நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் போலி வாக்குறுதி தொடருமாயின் மகிந்த ராஜபக்ஸவிற்கு நேர்ந்த கதியே, அவருக்கும் நேருமென பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மைத்திரி – மகிந்த ஆகிய இருவரது செயற்பாடுகளும் சமமானது என்றும் மைத்திரியின் செயற்பாடு அவரது தனிப்பட்ட நோக்கம் கொண்டது, மக்கள் நலன் சார்ந்ததல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜே.ஆருக்கு பின்னர் வந்த அரசாங்கங்கள் பல வாக்குறுதிகளை கொடுத் போதும் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறிய அவர் முஸ்லிம் சிங்கள மக்கள் விரும்பாத நிலையில் வடக்கு கிழக்கை இணைப்பதற்கு நிறைவேற்று அதிகாரம் பிழையாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சி ராஜபக்ஸவுடன் மறையும் நிலையில் காணப்படுவதாகவும் இனவாதம் கோத்திரவாதம் மிகுந்த, அரசியல் அராஜகமே மேலோங்கியுள்ளதாகவும் கூறிய அவர், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது நாட்டுக்கு மாத்திரமல்ல, கட்சிக்கும் நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.