மன்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜோஸ் மவுரினோ (Jose Mourinho) நீக்கப்பட்டுள்ளார். போர்த்துக்கல்லைச் சேர்ந்த ஜோஸ் மவுரினோ கடந்த 2016-ம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த சில மாதங்களாக இவருக்கும் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரருமான பால் போக்பாவுக்குமிடையில் கருத்துமுரண்பாடு காணப்பட்டு வந்தது.
அத்துடன் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் போட்டியின் போது மன்செஸ்டர் யுனைடெட் சரியாக விளையாடாததன் காரணமாக தரவரிசைப் பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது.இந்நிலையிலேயே ஜோஸ் மவுரினோ நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஒலே கன்னர் சோல்ஸ்க்ஜயர் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.