Home உலகம்அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பதவிவிலகுகின்றார்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பதவிவிலகுகின்றார்

by admin

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் என் மெற்றிஸ் ( James N. Mettis) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பதவிவிலகலுக்கான கடிதத்தினை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கேற்ப செயற்படும் பாதுகாப்பு செயலாளரை நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு உரிமை உள்ளது என, மெற்றிஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மெற்றிஸ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதவி விலகுவதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2 வருடங்களாக மெற்றிஸ் தமது நிர்வாகத்தின் கீழ் சிறந்த சேவையை ஆற்றியுள்ளதாகவும், ட்ரம்ப், தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவிலிருந்து அமெரிக்க இராணுவத்தை மீளப்பெறுவதாக டொனால்ட் ட்ரம்ப், நேற்று முன்தினம் அறிவித்ததனைத் தொடர்ந்தே மெற்றிஸ் பதவி விலகல் குறித்து அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More