Home இலங்கைலசந்த கொலை தொடர்பில் ஜகத் ஜயசூரியவிடமும் விசாரணை

லசந்த கொலை தொடர்பில் ஜகத் ஜயசூரியவிடமும் விசாரணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேஸிலுக்கான இலங்கை தூதுவருமான ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பிரேஸிலில் கடமையாற்றி வரும் ஜகத் ஜயசூரியவை நாடு திரும்பி விசாரணைகளில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டிருந்ததன்படி, இன்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஜகத் ஜயசூரியவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்த உள்ளனர்.

லசந்த கொலை தொடர்பில் முன்னதாக சில இராணுவப் புலாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், முதல் தடவையாக முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More